Wednesday, 30 May 2012

மழைக்காலம்

அது ஒரு மழைக்கால மாலை நேரம் !!!!
பள்ளியில் இருந்து வீடு திரும்பிய பின் மழை கொட்டத் தொடங்கியது

பலத்த இடியுடன் கூடிய மழை சற்றே பயத்தை உண்டாக்கியது..
கண்ணம்மா பாட்டிக்கு இடி என்றால் பயம் !
தன்னுடைய சிறு வயதில் தன் பாட்டியின் மீது இடி விழுந்ததை கண்டதினால் வந்தது அது !

அன்று கரு நீல தேவேந்திரா புடவையும் வெள்ளை நிற பிளவுசும் அணிந்திருந்தார் பாட்டி..
என் வீட்டு ஹாலின் கடைசி ஷேல்பினுள் தலையை புதைத்தவாறு படுத்திருந்தார்...
பாட்டியின் அருகில் சென்று படுத்துக் கொண்டேன் ...

என்னை கட்டிக்கொண்டு "அர்ஜுனா அர்ஜுனா அர்ஜுனா" என்று இடியும் மழையும் நிற்கும் வரை கூறிக்கொண்டு இருந்தார்...
இன்று நினைத்தாலும்,பாட்டியின் ஸ்பரிசத்தை உணர முடிகிறது...

"பட்டு கரு நீலப் புடவை, பதித்த  நல் வைரம்" என்ற பாரதியின் வரிகள், என் கண்ணம்மா பாட்டியை நினைவு படுத்த தவறியதில்லை......

உம்மம்ம்ம்மம்ம்ம்ம் ...அது ஒரு அழகிய மழைக்காலம் என்றே முணுமுணுத்து நகர்கிறேன்...

No comments:

Post a Comment